சூர்யா சிவா மீது சாட்டை துரைமுருகன் திருச்சி காவல் ஆணையரிடம் புகார்: அவதூறு பரப்புவதாக குற்றச்சாட்டு…
அண்ணாமலை தூண்டுதலில் பெயரில் பாஜக நிர்வாகி சூர்யாசிவா செயல்படுகிறார்.நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் திருச்சி காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தார்.
திருச்சி மாநகர காவல் துறை ஆணையரிடம்
நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி துரைமுருகன் என்கிற சாட்டை துரைமுருகன் பாரதி ஜனதா கட்சியின் ஓபிசி பிரிவு மாநில பொதுச் செயலாளர் சூர்யாசிவா மீது புகார் மனு அளித்தார் புகார் மனு அளித்தார்.
அம்மனுவில் நாம் தமிழர் கட்சியில் நிர்வாகியாக பொறுப்பு வகித்து வருகிறேன்.சாட்டை என்ற வலையொலி (யூடியூப்)சேனல் நடத்தி வருகிறேன். எனக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகனும் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகியுமான திருச்சி சூர்யாசிவா என்பவர் வலைதளத்தில் என்னை பற்றியும் என் மனைவியை பற்றியும் தரைக்குறைவாகவும், கேவலமாகவும் அருவருத்தக்க வகையில் நேர்காணல் அளித்துள்ளார். மேலும் சீமானுடைய தனிப்பட்ட வாழ்க்கை முறையை விசாரித்து பார்த்தால் மிகவும் கேவலமாக இருக்கும் எனவும்
தவறான முறையில் நேர்காணல் அளித்துள்ளார். எனவே சூர்யா சிவா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அம்மனுவில் தெரிவித்துள்ளார்
தொடர்ந்து செய்தியாளர்களுரக்கு பேட்டியளித்த சாட்டை துரைமுருகன்…
என்னைப் பற்றியும் என் மனைவியை பற்றியும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை பற்றியும் தரக்குறைவாக வலைதளத்தில் நேர்காணல் கொடுத்துள்ளார்.இது குறித்து மாநகர காவல் ஆணையர் அவர்களிடம் புகார் அளித்துள்ளோம். சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறோம்.என கூறும் பாரதிய ஜனதா கட்சி.பொது வாழ்க்கைக்கு வந்துள்ளவர்களின் குடும்பத்தாரையும், அவர்களது குடும்ப வாழ்க்கையை பற்றியும் பேசியும் அப்புறப்படுத்த வேண்டும். என நினைப்பது எந்த வகையான அரசியல் என்பதை பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் புரிந்து கொள்வார்கள்.
கடந்த 5நாட்களாக பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி சூர்யாசிவா வலைதளத்தில் கொடுத்த நேர்காணலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அதை சுமார் 15 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். திமுகவும், பாரதிய ஜனதா கட்சியின் ஊழல்களையும், அநீதிகளையும் எதிர்த்து சமூக வலைதளத்தில் பேசுகிறேன். பாரதிய ஜனதா கட்சியில் நடக்கக்கூடிய தவறுகளை எடுத்து பேசுகிறேன். ஒரே ஒரு காரணத்திற்காக உளவியல் ரீதியாக களங்கப்படுத்தி, அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக இப்படி செய்கிறார்கள். இதன் காரணமாக அவர்கள் அசிங்கப்படுகிறார்கள் எதிர்த்து தர்க்க ரீதியாக கொள்கை ரீதியாக சண்டை போட முடியாதவர்கள் அவதூரை கையில் எடுத்து திருச்சி சூர்யாசிவா என்ற ஒரு நபரை வைத்து திமுக, பாஜக இரண்டும் சேர்ந்து என்னை வீழ்த்த பார்க்கிறார்கள். சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.
இதை வழக்காக மாற்றி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மிகப்பெரிய சட்ட ஒழுங்கு சீர்கேடு ஏற்படும் அதன் பிறகு சாட்டை துரைமுருகன் அடிச்சிட்டார், மிதித்து விட்டார், அவர் ஆட்கள் அடித்துவிட்டார்கள் என்றால் அது தப்பாக போய்விடும். எல்லாவற்றிற்கும் நாங்கள் பொறுத்துப் போக முடியாது குடும்பத்தையும், தாய் தகப்பனையும் பேசிய பிறகு
பொது வாழ்க்கை அரசியல், கொள்கை என பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
இது அண்ணாமலையும் தூண்டுதல் தான் தொடர்ச்சியாக பாரதிய ஜனதா கட்சியின் பத்தாண்டு அவலங்களை தொடர்ச்சியாக தோள் உரித்து வருகிறோம்.
அண்ணாமலை நேரடியாகப் பேச முடியாது இதுபோன்ற அல்லக்கைகளை வைத்துக்கொண்டு பேசவிடுகிறது.தொடர்ச்சியாக இது போன்று செய்து வருகிறார். அண்ணாமலைக்கும், சீமானுக்கும் எப்போதெல்லாம் கருத்து முரண்பாடு ஏற்படுகிறதோ அப்ப எல்லாம் இந்த சூர்யா சிவா, அமர் பிரசாத் ரெட்டி என்கிற இவர்கள்தான் தான் பேசுகிறார்கள் அண்ணாமலை நேருக்கு நேராக வாதம் வைத்தால் வைக்கட்டும்.
சூர்யா சிவா குடும்பத்தை பேசினால் என்ன ஆகும் அவருடைய அப்பா டெல்லியில் செருப்படி வாங்கியது பேசினால் நன்றாக இருக்குமா?வீட்டை விட்டு வெளியே துரத்திய பின்பு மாமியார் வீட்டில் போய் தஞ்சம் புகுந்து உள்ளீர்கள் அதை பத்தி பேச நன்றாக இருக்குமா? பத்தாண்டு காலமாக நாட்டை நாசம் செய்து விட்டு தியானம் செய்கிறேன் என்று உட்கார்ந்து இருக்கிறார்.
அதை கேள்வி கேட்கிறோம் என்பதால் அதை பேசாமல் தனி நபர் வாழ்க்கையை பற்றியும் குடும்பத்தை பற்றி பேசுகிறது.
அவர்களுக்கு குடும்பம் இல்லையா? அதைப்பற்றி பேசக்கூடாது அறம் கிடையாது என்பதால் தான் நாங்கள் கடந்து போகிறோம்.
தொடர்ந்து இப்படியே போய்க் கொண்டிருந்தால் அது சட்டம் ஒழுங்கு சீர்கேடாகத்தான் தான் மாறும்.
ஏற்கனவே புதுக்கோட்டையை சேர்ந்த நபர் பேசிய போது புகார் கொடுத்து இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை தற்போது சூர்யாசிவா மீது புகார் அளித்துள்ளோம்.பாரதிய ஜனதா கட்சியில் இருந்து பெண்களை இழிவுபடுத்த ஒரு நபரை கைது செய்ய திமுக அரசு ஏன் தயங்குகிறது. எம்பி சிவா பையன் என்பதால் தயக்கமா?
இது நிச்சயம் அண்ணாமலை செய்வது தான் அவரின் தூண்டுதலில் தான் இது நடைபெறுகிறது என தெரிவித்தார்.