பெரம்பலூர் தொகுதியில் கே.என்.அருண் நேரு அமோக வெற்றி: வெற்றிக்கான சான்றிதழை பெற்றுக் கொண்டார்…
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க.சார்பில் போட்டியிட்ட கே.என்.அருண்நேரு (389107)லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தேர்தல் பொதுப்பார்வையாளர் ராஜேந்திரகுமார் வர்மாவிடம் வெற்றிச் சான்றிதழை பெற்றுக் கொண்டார்.தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கற்பகம் உடனிருந்தார்.தி.மு.க. முதன்மைச்செயலாளரும்,நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான கேஎன்.நேரு,
மாவட்ட கழகச் செயலாளர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்!
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் கே.என்.அருண்நேரு போட்டியிட்டார். பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பெரம்பலூர் ஆதவ் ப்பளிக் தனியார் பள்ளியில் வைக்கப்பட்டிருந்தது.இன்று நடைபெற்ற
வாக்கு எண்ணிக்கையில் (24)சுற்றுகளிலும் தொடர்ந்து முன்னிலையில் வந்து
(389107)லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.தேர்தல் நடத்தும் பொதுப்பார்வையாளர் ராஜேந்திர குமார் வர்மா விடம் வெற்றிச் சான்றிதழ் பெற்றுக் கொண்டார். தேர்தல் நடத்தும் அலுவலரும்,மாவட்ட ஆட்சியருமான கற்பகம் உடனிருந்தார்.