News

டூரிஸ்ட் இரவு நேரங்களில் வனவிலங்குகளை கண்டுகளிக்க புது யுக்தி: விடுதி மேலாளர் உட்பட நான்குபேர் கைது…

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகம் ஆசியாவின் மிகப் பழமையான புலிகள் காப்பகமாக உள்ளது.

வனவிலங்குகள் பாதுகாப்பு 1940 இல் நிறுவப்பட்டது, இது 124 சதுர மைல்கள் (322 சதுர கிமீ) பரப்பளவைக் கொண்டுள்ளது.

இந்த சரணாலயம் பல வற்றாத நீரோடைகள் மற்றும் சதுப்பு நிலங்களைக் கொண்ட மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளால் ஆனது . தேக்கு, ரோஸ்வுட், லாரல் மற்றும் மூங்கில் ஆகியவற்றின் அடர்ந்த காடுகளின் வளர்ச்சியானது யானைகள், கௌர்ஸ் (இந்திய காட்டெருமை), புலிகள், கருஞ்சிறுத்தைகள், சோம்பல் கரடிகள், ஹைனாக்கள், குள்ளநரிகள், காட்டுப் பன்றிகள், மலைப்பாம்புகள், சாம்பல் காட்டுக்கோழிகள் , ஸ்பர் கோழி மற்றும் பறவைகளுக்கு பாதுகாப்பு அரணாக திகழ்கிறது

இதை காண உலகெங்கிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர் இவர்கள் தங்க முதுமலை வெளிவட்ட வனப்பகுதி பகுதிகளில் குறிப்பாக மசினகுடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஏராளமான தனியார் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன

தங்கும் விடுதியாளர்கள் சுற்றுலா பயணிகளை தங்கள் தங்கும் விடுதிகளுக்கு வரவழைக்க பல தவறான பல்வேறு யுத்திகளை பயன்படுத்தி வருகின்றனர் என பரவலாக குற்றசாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தன

குறிப்பாக அவர்களின் வலைதள பக்கத்தில் வனவிலங்குகள் தங்கள் விடுதியை சுற்றி நடமாடுவதாக பதிவிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகளை வரவழைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருவதாகவும் குற்றசாட்டுகள் எழுந்தன

முதுமலை வெளிவட்ட வனப்பகுதிக்கு உட்பட்ட சிங்கார வனச்சரகத்திற்குட்பட்ட ஆச்சகரை பகுதியில் அவடேல் என்ற பெயரில் தனியார் தங்க விடுதி செயல்பட்டு வருகிறது.

அந்த தனியார் தங்கு விடுதியில் மேலாளர் உட்பட அனைத்து பணியாளர்களும் சத்தீஸ்கர் மற்றும் மேற்குவங்கம் மாநிலங்களைச் சேர்ந்த வட மாநில தொழிலாளர்களாக இருந்து வருகின்றனர்.

இங்குதங்கும் சுற்றுலா பயணிகள் இரவு நேரங்களில் வனவிலங்குகளை கண்டு களிப்பதற்காக இவர்கள் புது யுக்தியை பயன்படுத்தி வருவது கண்டுபிடிக்க பட்டது
யானைகள் போன்ற வனவிலங்குகளுக்கு தங்களின் விடுதி அருகில் அவைகளுக்கு பிடித்த உணவு மற்றும் தங்கும் விடுதிகளில் மீதம் உள்ள உணவுகளை யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு இவர்கள் உணவாக கொடுத்து நாள்தோறும் காட்டு யானைகள் மற்றும் புலிகள் போன்ற வனவிலங்குகளை தங்கள் விடுதிக்கு அருகில் வரவழைக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இது தொடர்பாக புகார்கள் வந்ததை தொடர்ந்து சிங்கார வனச்சரகர் பீட்டர் தலைமையிலான வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்

இன்று சதீஷ்கர், மேற்குவங்கம், வடமாநிலத்தை சேர்ந்த அனிருத்த அவஸ்தி, திரவ் குமார் ராங், அஜ்மாவுல்லா, டேவிட் ரியாங்க் என்ற நான்கு பேரும் ஆங்காங்கே பிரிந்து யானையை தங்கள் விடுதிக்கு வரவழைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மறைந்திருந்து இதனை கண்காணித்து வந்த வனத்துறையினர் இவர்களை கையும் களவுமாக பிடித்தனர்.

1. அனிருத்த அவஸ்தி(26)
த/பெ.ராஜீவ் அவஸ்தி
2. திரவ் குமார் ராங் (33)
த/பெ.மங்கள் ஜோய் ரியாங்
3. S.K.அஜ்மாவுல்லா (25)
த/பெ.மெகர்மான் கனி
4. டேவிட் ரியாங் (19)
த.பெ.சர்பஜோய் ரியாங்

ஆகியோர் மீது தொடர்ந்து வனப் பகுதிகளில் வசிக்கக்கூடிய வனவிலங்குகளுக்கு எரிச்சல் ஊட்டும் விதமாக நடப்பது மட்டுமின்றி உணவு முறையில் மாற்றம் செய்து வனவிலங்குகளை தங்கள் பக்கம் ஈர்க்க இவர்கள் செய்த குற்றத்திற்காக சுமார் ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து உள்ளனர்

துணை இயக்குநர் அவர்களின் உத்தரவின்படி மேற்படிஎதிரிகளை கைது செய்து கனம் குற்றவியல் நீதித்துறை நடுவர், கூடலூர் அவர்கள் முன்பு ஆஜர்படுத்தி கூடலூர் கிளைச்சிறையில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைத்து வரப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *