திருச்சியில் நீட் தேர்வு குளறுபடிகளை கண்டித்து மாணவர்கள் போராட்டம்…
அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் திருச்சி மாவட்ட குழுவின் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், நீட் தேர்வில் நடைபெற்ற குளறுபடிகளை கண்டித்தும், தேசிய தேர்வு முகமையிடம் விசாரணை நடத்த கோரியும் திருச்சி புறநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காமேஷ் தலைமையில் திருவரம்பூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநில தலைவர் க.இப்ராகிம், கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் செ. ராஜ்குமார், இளைஞர் பெருமன்ற புறநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழரசன், மாணவர் பெருமன்ற மாணவர் மாநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெய்லானி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இதில் 15-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக கண்டனம் முழக்கங்கள் எழுப்பினர்.