News

3-சதவீத இட ஒதுக்கீடு: கூடோ வீரர்களுக்கு வழங்க கோரிக்கை…

விளையாட்டு வீரர்களுக்கான 3சதவீத இட ஒதுக்கீட்டில் கூடோ விளையாட்டு வீரர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்-தமிழக கூடோ பயிற்சியாளர் கந்தமூர்த்தி தமிழக அரசுக்கு கோரிக்கை.

தமிழ்நாடு கூடோ சங்கத்தின் சார்பில் 7வது மாநில அளவிலான பயிற்சி பட்டறை, மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று திருச்சி பொன்மலைபட்டியில் உள்ள தமிழக கூடோ பயிற்சி மையத்தில் பயிற்சியாளர் கந்தமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இந்த பயிற்சி கருத்தரங்கில் திருச்சி, நாமக்கல் கூடலூர் கோவை மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள் இதில் கலந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து மாநில பொதுக்குழு கூட்டம் பயிற்சியாளர் கந்தமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிக்கு அதிக அளவில் வீரர் வீராங்கனைகளை பங்குபெற செய்வது, மேலும் விளையாட்டு துறை வீரர்களுக்கு வழங்கப்படும் 3சதவீத வேலை வாய்ப்பில் கூடோ போட்டிகள் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பயிற்சியாளர் கந்தமூர்த்தி:

இன்று தமிழ்நாடு கூடோ சங்கத்தின் சார்பில் மாநில அளவில் தேசிய நடுவர் பயிற்சி,மாநில நடுவர் பட்டம், பயிற்சி பட்டறை மற்றும்
மாநில பொதுக்குழு கூட்டம் ஆகியவை நடைபெற்றது.

இந்த பயிற்சி பட்டறையில் ஆகஸ்ட் மாதம் 31 மற்றும் செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெற இருக்கக்கூடிய 6வது மாநில அளவிலான கூடோ போட்டிக்கான மாநில நடுவர் தேர்வு இன்று நடைபெற்றது. இந்த மாநில நடுவர் தேர்வில் திருச்சி, , நாமக்கல், , திருவள்ளூர், , மதுரை, கடலூர், சேலம் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து பயிற்சியாளர்கள் பங்கு பெற்றனர். இதில் சிறப்பாக தேர்வு செய்யக்கூடிய நடுவர்களை நடைபெற உள்ள மாநில போட்டிக்கு தேர்வுக்கு செய்யப்பட உள்ளனர். மேலும் ஆகஸ்ட் மாதம் 29 மற்றும் 30ஆம் தேதி திருச்சியில் தேசிய மற்றும் ஆசிய கூடோ பயிற்சி மையத்தின் தலைவர் தமிழகத்தில் பயிற்சி அளிக்க இருக்கிறார்கள். நடைபெற உள்ள இந்த யிற்சி முகாமில் தேசிய நடுவர் பட்டமும், கருப்புப்பட்டு தேர்வும் நடைபெற உள்ளது. இந்த கூடோ தற்காப்பு விளையாட்டில் மாநில அளவிலான தேர்வு செய்யப்பட்ட விளையாட்டு வீரர்கள் நவம்பர் மாதம் 4ம் தேதி குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெறுக்கூடிய தேசிய போட்டியில் பங்கு பெறுவார்கள்பெறுவார்கள். இந்த தேசிய போட்டியில் பங்கு பெற இருக்க கூடிய விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் படிப்பு உண்டான சிறப்பு தொகை வழங்கப்படுகிறது. சென்ற வருடம் தேசிய போட்டியில் பங்கு பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு கஸ்டம்ஸ் பிரிவில் வேலை வாய்ப்பு கிடைக்கப்பட்டுள்ளது என்பது இந்த கூடோ விளையாட்டுக்கு சிறப்பான செய்தியாகும். மேலும் தமிழ்நாடு கூட விளையாட்டு சங்கத்தில் SDTAவில் அங்கீகாரம் பெறுவதற்கான நடைமுறைகள் நடந்து கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் தேசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் படிப்பு உண்டான போனஸ் மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது என்பதை குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள மாநில போட்டிக்கு அனைத்து மாவட்டங்களிலிருந்தும் அதிக அளவிலான விளையாட்டு வீரர்கள் பங்கு கொண்டு வெற்றி பெற்று தேசிய அளவிலான போட்டியில் பங்கு பெற செய்ய வேண்டும், மற்ற விளையாட்டுகளில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கக்கூடிய 3சதவீத இட ஒதுக்கீட்டில் கூடோ விளையாட்டு வீரர்களுக்கும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு இந்நேரத்தில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *