திருச்சி அரசு மருத்துவ மனையில்: மருத்துவர்கள் தின கொண்டாட்டம்…
புகழ் பெற்ற மருத்துவரும் மேற்கு வங்கத்தின் இரண்டாவது முதலமைச்சருமான டாக்டர் பிதான் சந்திரராயின் பிறந்த நாளில், ஒவ்வொரு வருடமும் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
டாக்டர் பி.சி.ராய் எண்ணற்ற நபர்களுக்கு சேவை செய்வதற்கும் சிகிச்சை அளிப்பதற்கும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.
முதன் முதலில் இதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்தார்.
பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகள் பெற்றவர். அவரது நினைவாக மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் தேசிய மருத்துவர் தினம் கொண்டபட்டது இதில் மருத்துவர்கள் இணைந்து கேக் வெட்டி மருத்துவர் தினத்தை கொண்டாடினர்.மேலும் சிறப்பாக சேவை செய்த மருத்துவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தொடர்ந்து பணியாளர்கள் இனிப்புகள் மற்றும் ரோஜா பூக்களை கொடுத்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்