திருச்சி காந்தி மார்க்கெட்டில்: பாரம் தூக்கும் தொழிலாளி கொலை…
திருச்சி காந்தி மார்க்கெட்டில் பணிபுரியும் சுமை தூக்கும் தொழிலாளர் கொலை-பணம் கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததால் மைத்துனர் ஆத்திரம்.
திருச்சி காந்தி மார்க்கெட் வாழைக்காய் மண்டி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் காந்தி மார்க்கெட்டில் சுமை பணி தொழிலாளராக பணியாற்றி வருகிறார் அதே போல இவருடைய உறவினரான குமாரும் அங்கு சுமை பணி தொழிலாளராக பணியாற்றி வருகிறார். இருவரும் ஒன்றாகவே மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளனர். அவ்வப்போது குமாரிடம் சுரேஷ் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு இருவரும் ஒன்றாக இருந்தபோது குமாரிடம் சுரேஷ் வலுக்கட்டாயமாக பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அப்பொழுது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த குமார் தான் கையில் வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் சுரேஷை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சுரேஷை மீட்டு அவருடைய உறவினர்கள் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சுரேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.