News

திருச்சியில் ரவுடிகளை களையெடுக்க தொடரும் போலீசாரின் துப்பாக்கி சூடு…

லெஃப்ட், ரைட்டாக செயல்படுவதில் போட்டி-கொலை, ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்…

திருச்சி மாவட்டம் லால்குடி ஆங்கரையை சேர்ந்த விஜய் ரசிகர் நிர்வாகியும் ரவுடியுமான நவீன் குமார் நேற்று முன்தினம் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்த விசாரணையில் திருச்சி மாவட்டம் லால்குடி டால்மியாவை சேர்ந்த பிரபல ரவுடி தமிழரசன், இவன் மீது கொலை கொள்ளை வெடிகுண்டு வீச்சு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
பிரபல ரவுடிக்கு நவீன் குமார் மற்றும் கலைப்புலி ராஜா பக்கபலமாக இருந்தது தெரிய வந்துள்ளது.இருவரில் யார் பெரியவர் என்ற மோதல் கலைப்புலி ராஜாவுக்கும் நவீன் குமாருக்கும் இடையே நீண்ட நாட்களாக இருந்து வந்துள்ளது.இந்த சம்பவம் காரணமாக முன் விரோதத்தில் இருந்து வந்த கலைப்புலி ராஜா நேற்று முன்தினம் நண்பர் ஒருவர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு திரும்பிய போது நவீனை வெட்டி படுகொலை செய்தார்

இந்த வழக்கில், அதே பகுதியை சேர்ந்த ரவுடி ராஜா என்கிற கலைபுலி ராஜாவை லால்குடி போலீசார் தேடி வந்தனர். இந்த கொலை சம்பவத்தில் ஏற்கனவே இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கலைபுலி ராஜா மற்றும் அவரது நண்பர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள சிறுகனூர் வனப்பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதன் அடிப்படையில் அங்கு சென்ற தனிப்படை போலீசார் அங்கிருந்த கலைப்புலி ராஜா மற்றும் அவரது நண்பர் ஸ்ரீநாத் ஆகியோரை பிடிக்க முயன்றனர் அப்போது ராஜா தான் வைத்திருந்த அரிவாளை வைத்து காவல்துறையினரை தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது இதனை அடுத்து காவல்துறையினர் கலைப்புலி ராஜாவை வலது காலில் சுட்டு பிடித்தனர். தொடர்ந்து ராஜாவின் நண்பர் ஸ்ரீநாத் தப்பிக்க முயன்ற போது அங்கிருந்த ஒரு கல்லில் மோதி கீழே விழுந்ததில் அவரது கால் முறிந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து ரௌடி கலைப்புலி ராஜா லால்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். தப்பிக்க முயன்று கால் முறிவு ஏற்பட்டுள்ள ஸ்ரீநாத் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதே பகுதியில் தான் பிரபல ரவுடி கொம்பன் ஜெகன் என்கவுண்டர் செய்யப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *