திருச்சியில் திமுக அரசை கண்டித்து: தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்…
தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் சார்பில் திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. கண்டன உரையை மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் இராகவ்பிரகாஷ் வழங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில்
மின்சார கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், மக்களுக்கான ரேஷன் பொருட்களை தடையின்றி வழங்க வேண்டும் எனவும்
காவிரி நீரை திறக்க மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்தும் 100க்கு மேற்பட்டோர்
கோஷமிட்டனர். இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் ஜெயராமன், பொருளாளர் மில்டன் குமார், திருப்பதி, துணை செயலாளர்கள் பிரீத்தா விஜய் ஆனந்த், காளியப்பன், ராஜ்குமார், ஐயப்பன், பெருமாள் பகுதி செயலாளர் மோகன், அலெக்ஸாண்டர், மணிகண்டன், தமிழன், தமிழ்செல்வன், அன்வர் அலி, இந்துமதி, உமா , பிரியா , மாஸ் விஜி உள்ளிட்ட நிர்வாகிகளும் ஏராளமான தொண்டர்களும் கலந்துகொண்டனர்.