News

திருச்சி வந்த எடப்பாடி பழனிசாமிக்கு: உற்சாக வரவேற்பு அளித்த அதிமுகவினர்…

திருச்சி விமான நிலையம் வந்தடைந்த அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு திருச்சி மாவட்ட அதிமுகவினர் உற்சாக வரவேற்பு.

தமிழக முன்னாள் முதலமைச்சர்,சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்,அதிமுக பொதுச்செயலாளர்,எடப்பாடி.பழனிச்சாமி தஞ்சை,நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார்.

திருச்சி வந்தடைந்த அவருக்கு, திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட கழகம் சார்பில் அதிமுகவினர் செண்டை மேள தாளங்கள் முழங்க, உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதில், அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் எம்.பி குமார்,புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுயர மலர் மாலை அணிவித்தும்,பொன்னாடை வழங்கியும்,பூங்கொத்து கொடுத்தும்,புத்தகங்கள் வழங்கியும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இதில்,முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வளர்மதி,சிவபதி, அமைப்புச் செயலாளர் ரத்னவேல்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் எம்.பி.கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அதனைத் தொடர்ந்து சாலை வழி பயணமாக புறப்பட்டுச் சென்ற எடப்பாடி.பழனிச்சாமி, தஞ்சை மத்திய மாவட்டம் சார்பில் வல்லம் பிரிவு சாலையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக தஞ்சை மாவட்டத்தில் மன்னார்குடி ஒன்றிய பெருந்தலைவர் மனோகரன் இல்ல திருமண நிகழ்வில் பங்கேற்கிறார்.

அதனை தொடர்ந்து, நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெறும் முன்னாள் அமைச்சர் ஜெயபால் இல்ல வரவேற்பு நிகழச்சி மற்றும் பல்வேறு கட்சிகளில் இருந்து வந்த நிர்வாகிகள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின் இன்று மாலை மீண்டும் திருச்சி விமான நிலையம் வந்தடைந்து, விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *