திருச்சியில் ஐபிஎல் போட்டி திறந்தவெளி மைதானத்தில் நேரடி ஒளிபரப்பு – பிசிசிஐ நிர்வாக உறுப்பினர் பேட்டி…
திருச்சியில் ஐபிஎல் போட்டி திறந்தவெளி மைதானத்தில் நேரடி ஒளிபரப்பு – திருச்சி பிரஸ் கிளப்பில் பிசிசிஐ நிர்வாக உறுப்பினர் பேட்டி
ஐபிஎல் போட்டி திறந்தவெளி மைதானத்தில் நேரடி ஒளிபரப்பு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி தேசிய கல்லூரியில் திறந்தவெளி மைதானம் அமைத்து அதில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பதற்கான முயற்சியை பிசிசிஐ முன்னெடுத்துள்ளது.
இந்நிலையில் இன்று மதியம் பன்னிரண்டு மணிக்கு திருச்சி பிரஸ் கிளப்பில் பிசிசிஐ உறுப்பினர் ஆல்வின் கைட்வார்க், திருச்சி மாவட்ட கிரிக்கெட் அசோசியேசன் பிரதிநிதி சஞ்சய் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்…
திருச்சி தேசிய கல்லூரியில் திறந்தவெளி மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்படுகின்றன. இந்த போட்டிக்கான நுழைவு கட்டணம் முற்றிலும் இலவசம். மேலும் அங்கு ரசிகர்களை கவரக்கூடிய 360 போட்டோ கேப்சர் உள்ளிட்ட பல அம்சங்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு விற்பனை செய்யப்படும் உணவு மற்றும் விலை கொடுத்து பெற்றுக்கொள்ள வேண்டும் மற்ற அனைத்து வகையான கொண்டாட்டங்களும் இலவசமாக கொடுக்கப்படுகிறது அனைவரும் பங்கு பெற்று ஐபிஎல் போட்டிகளை கொண்டாட வேண்டும் என பேசினார். நாளை நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி ஒளிபரப்பப்பட உள்ளது இதனை தொடர்ந்து அனைத்து போட்டிகளும் ஒளிபரப்பப்படும் என கூறினார்.