நீலகிரி அருகே உடல்மெலிந்த நிலையில் நடமாடும்; ஒற்றை யானை…வனத்துறை கண்காணிக்க கோரிக்கை…
கல்லட்டி சாலையில் உடல்மெலிந்த நிலையில் நடமாடிய ஒற்றையானை வனத்துறை கண்காணிக்க கோரிக்கை…
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து மசினகுடி செல்லும் கல்லட்டி சாலையில் இன்று உடல் மெலிந்த நிலையில் காணப்படும் ஒற்றையானை நடமாடி வருகிறது.பகலில் சாலைஓரம் நடமாடிய இந்த யானை இரவில் சீகூர் பாலம் பகுதியில் நீண்டநேரம் நடமாடியது.உடல் மெலிந்த நிலையில் இந்த யானை காணப்படுகிறது. நடப்பதற்கு மிகவும் சிரமபடும் நிலையில் உள்ளதாக நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
உணவு தட்டுபாடா?அல்லது உடல் நலக்குறைபாடா? என வனத்துறை உடனடியாக ஆய்வு செய்ய வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.