மைக்ரோ பைனான்ஸ் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நிர்வாண போராட்டம் நடத்துவோம் அய்யாக்கண்ணு பேட்டி…
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பல்வேறு விவசாய சங்கத்தினர் தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு பேசுகையில் மைக்ரோ பைனான்ஸ் என்ற பெயரில் நடத்தி வரும் நிறுவனங்கள் விவசாயிகள் கடன் கொடுத்துவிட்டு அவர்கள் பணம் கட்டிய பிறகும் அதிக வட்டி தர வேண்டும் என கூறி அவர்களது வாகனத்தை குண்டர்கள் வைத்து எடுத்துச் செல்கின்றனர்.
திருச்சி காவிரி ஆற்றில் இருந்து கதவனை கட்டி கர்நாடகா திறந்துவிடும் வெள்ள நீரை கடந்து செல்லாமல் தேட வேண்டும் என கோரிக்கை வைத்தால் கதவனை கட்ட நிதி இல்லை என்று அந்த பணிகளை மேற்கொள்ளவில்லை உடனடியாக காவிரி ஆற்றில் கதவனுக்கு கட்டப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
அதைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சி அலுவலகம் வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அய்யாகண்ணு…
தமிழக அரசு விவசாயிகளை மோசடி செய்து ஏமாற்றுபவர்களை கைது செய்ய மறுக்கின்றனர்.
விவசாயிடம் 24%மேல் கடன் வட்டி வாங்க கூடாது என்று சட்டம் இருக்கிறது ஆனால் 40சதம் வரை கடன் வாங்குகின்றார்கள் காவல்நிலத்தில் புகார் கொடுத்தாலும் அவர்களை கைது செய்வதில்லை.
விவசாயிகளின் வாகனத்தை பறிமுதல் செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம், காவல்துறையும் தெரிவித்துள்ளது.
நீதிமன்றம் மூலமாகத்தான் லாரிகள் ஜேசிபி இயந்திரங்கள் பறிமுதல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் எந்தவித முன்னறிவிப்பு இன்றி பறிமுதல் செய்கின்றனர். காவல்துறையில் புகார் கொடுத்தால் எந்தவித நடவடிக்கையும் இல்லை
கடனை கொடுத்துவிட்டு கொள்ளையடிக்கின்றனர்.
தடுப்பணை கட்டாமல் போர் போட்டு அனைத்து தண்ணிகளையும் கொண்டு செல்கின்றனர்.
விவசாயிகள் பிள்ளைகள் படித்தாலும், அவர்களுக்கு அரசு வேலை கொடுப்பதும் இல்லை.
அரசு எங்களது சட்டை, வேட்டி களை பிடுங்க பார்க்கிறது கோவணத்தையும் புடுங்கி நிர்வாணமாக மாற்ற பார்க்கிறது என்பதற்காக இது குறித்து மாவட்ட ஆட்சியிடத்தில் மனு அளித்துள்ளோம்.
மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தை சேர்ந்தவர்களை கைது செய்ய வேண்டும் இப்போது சட்டை இல்லாமல் தான் இருக்கிறோம் நடவடிக்கை இல்லையென்றால் அடுத்த கூட்டத்தில் நிர்வாணமாக நிற்கப் போகின்றோம்.
100 நாள் வேலைகளுக்கு தாங்கள் ரூ.300 தருகிறோம் ஆனால் விவசாய வேலைகளுக்கு யாரும் வருவதில்லை. நூறு நாட்கள் வேலை யாரும் செய்யாமல் இருப்பதால் அங்கு பணிக்கு செல்கின்றனர் எனவே 100நாட்கள் பணியாளர்களை விவசாய அனுப்ப வேண்டும்
என தெரிவித்தார்.