இரட்டைப் பிரபை வாகனத்தில் ஸ்ரீ நம்பெருமாள்…
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு கடந்த 26ம் தேதி முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சியும் 28ம் தேதி முக்கிய நிகழ்வான கொடியேற்றமும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நான்காம் திருநாளான இன்று ஸ்ரீநம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து அதிகாலை 3.30மணிக்கு புறப்பட்டு 3.45மணிக்கு வாகன மண்டபம் சென்றடைந்தார்.பின்னர் 4.30 மணிக்கு இரட்டைப்பிரபை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து காலை 6மணிக்கு வாகன மண்டபம் சென்றடைந்தார்.இதனை தொடர்ந்து வாகன மண்டபத்திலிருந்து பல்லக்கில் 7.15 மணிக்கு புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி பகல் 12மணிக்கு திருச்சி ஆரிய வைஸ்யாள் ஆஸ்தான மண்டபத்திற்கு சென்றடைகிறார்.