HealthNews

வெப்ப அலையால் பாதிக்கப்படுவோருக்கு சிறப்பு சிகிச்சை பிரிவு ;திருச்சியில் அரசு மருத்துவமனை டீன் பேட்டி…

திருச்சி அரசு மருத்துவமனையில் வெப்ப அலையால் பாதிக்கப்படுவோருக்கான சிறப்பு சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டுள்ளது –
அரசு மருத்துவமனை டீன் ;நேரு பேட்டி

கோடைகால வெப்ப அலை தாக்கத்தில் எப்படி நம்மை பாதுகாகத்து கொள்ள வேண்டும், எந்த விதமான உடைகள் அணிய வேண்டும் உள்ளிட்ட முன் எச்சரிக்கை தொடர்பாக
திருச்சி அரசு மருத்துவமனை டீன் நேரு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்

தமிழகம் முழுவதும் அதிகமான வெப்ப அலை பொதுமக்களை தாக்கி வருகிறது. இதனால் பொது மக்களுக்கு உடல் ரீதியாக பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக வியர்வை அதிக அளவில் வெளியேறுவதால் அசதி, மயக்கம், தலைச்சுற்றல், வாந்தி ஏற்படுகிறது. சிலருக்கு நோய் தாக்கம் இருப்பதால் இருதய பாதிப்பு ஏற்படலாம், ரத்த கொதிப்பு, சர்க்கரைநோய், உள்ளவர்கள் வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
அதிக அளவில் வெயிலில் வேலை செய்பவர்கள் தங்களது தலையில் துணி சுற்றிக் கொள்ள வேண்டும், உடலில் பருத்தி ஆடை அணிந்து கொள்ளலாம், வெள்ளை நிற ஆடைகளையே அணிய வேண்டும், கருப்பு நிற ஆடைகள் வெயிலை ஈர்க்கும் தன்மை உடையதால் நம் உடலில் அதிகளவான வெப்ப தாக்கம் ஏற்படும். முழுக்கை ஆடைகள் அணிவது சிறப்பு, தொப்பி அணியலாம் கண்டிப்பாக வெளியில் செல்லும்போது குடை எடுத்துக் கொண்டு போவது நல்லது,
வெளியே செல்பவர்கள் கட்டாயமாக தண்ணீரை கொண்டு செல்ல வேண்டும். இதன் காரணமாக தாகத்தை தீர்த்துக் கொள்வது மட்டுமல்ல இதனால் ஏற்படும் உப்புச்சத்து, ரத்த குறைபாடுகளிலிருந்து காத்துக் கொள்ளலாம். வியர்வை அதிகமாகும் போது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தின் அளவு குறையும், 5லிட்டர் ரத்தம் சுத்தி கொண்டிருக்கும் என்றால் வியர்வை வழியாக ரத்தத்தின் அளவு குறையும் இதனால் மயக்கம் ஏற்படலாம்.

வெப்ப அலை தாக்குதல் பாதிக்கப்படுவோருக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் குழந்தைகளுக்காக 4படுக்கையும், பெரியவர்களுக்கும் 4படுக்கை , 4படுக்கைகள் கர்ப்பிணி பெண்களுக்கு என 12 படுக்கை உள்ள பிரிவு துவக்கப்பட்டுள்ளது. இங்கு
அனைத்து மருந்துகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

வெயில் காலத்தில் நன்னாரி சர்பத், நீர் மோர் போன்ற இயற்கையான பானங்களை பருகலாம் ஐஸ் குறைந்த அளவை எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *