News

திருச்சி கரூர் சாலையில்:- 4-ஆம் கட்ட கள ஆய்வு பணிகள்…

திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலை திருப்பராய்துறை பகுதியில் சாலை பாதுகாப்பு சம்பந்தமாக நான்காம் கட்ட கள ஆய்வு பணிகள்.

திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பராய்துறை பேருந்து நிறுத்த பகுதி முக்கிய விபத்து பகுதியாகும்.இப் பகுதியில் பல வருடங்களுக்கு முன்பு பத்துக்கும் மேற்பட்ட மணவ மாணவிகள் விபத்தில் இறந்து உள்ளனர்.
இப் பகுதியை கடக்கும் வாகனங்களின் வேக அளவினை கட்டுபடுத்த வேண்டியும் ,இச் சாலை பகுதியில் நிரந்தர சாலை பாதுகாப்பு கட்டமைப்புகளை நிறுவ வேண்டியும் முன்னால் விமான படை அதிகாரி தங்கராஜ் அவர்கள் பாரத பிரதமர்,தமிழக முதல்வர்,மத்திய தரை வழி போக்குவரத்து அமைச்சர், தமிழக முதல்வரின் முகவரி துறைக்கு தொடர்ந்து மனுக்கள் அனுப்ப பட்டதை தொடர்ந்து மூன்று முறை கள ஆய்வுகள் செய்யபட்டு தற்காலிக சாலை கட்டமைப்புகள் நிறுவ பட்டுள்ளது.
இந் நிலையில் நேற்று 30/09/24 திங்கள்கிழமை Shailendra Mohan
GMD safety consultant, Mumbai அவர்கள் திருப்பராய்துறை பகுதியில் நான்காம் கட்ட கள ஆய்வு பணியினை மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் மனுதாரர் முன்னாள் விமான படை அதிகாரி தங்கராஜ், கரூர் சாலை சேப்டி கன்சலன்ட் மணிமாறன்,திருப்பராய்துறை துறை ஊராட்சி தலைவர் பிரகாச மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கள ஆய்வில் Shailendra Mohan
GMD safety consultant, Mumbai அவர்கள் விபத்து பகுதியான இப்பகுதியில் வாகனங்களின் வேகத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கபடும்,
வரும் நாட்களில் Tropo study for 24hrs
ஆய்வு செய்யபடும்,திருப்பராய்த்துறை பகுதியில் நிரந்த சாலை பாதுகாப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்த அனைத்து உதவிகள் செய்யபடும்,மேலும் முக்கொம்பு கரு பகுதி நேர் செய்ய ஆவண செய்யபடும் எனவும் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *